கரூர் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் ரூபாய் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சிக் கூடத்தை பார்வையிட்டு, உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா மணிவண்ணன், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தனேஷ் என்கிற முத்துக்குமார், தாந்தோணி ஊராட்சி தலைவர் சிவகாமி வேலுசாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: