ETV Bharat / state

பேரவைத் தேர்தலில் அதிமுக தோற்பது உறுதி - திமுக முன்னாள் அமைச்சர்

author img

By

Published : Dec 16, 2020, 6:19 AM IST

கரூர்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது திமுகவின் வேட்பாளரிடம் தோல்வியுற்று திரும்பியதைப் போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோற்பது உறுதி என திமுகவின் மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி தெரிவித்துள்ளார்.

AIADMK will surely to lose 2021 assembly elections

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் திமுக தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் தங்களது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார்.

அந்த வகையில், திமுக மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி இன்று (டிச. 15) கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி ஊராட்சியிலிருந்து தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், வர்த்தகர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி சந்தைபேட்டை பகுதியில் இஸ்லாமிய சமூக உலமாக்களைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சின்னச்சாமி தெரிவிக்கையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி, 16 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இன்று அரவக்குறிச்சியிலிருந்து எனது பரப்புரையைத் தொடங்கியுள்ளேன்.

இது வழக்கமான பரப்புரை அல்ல; மக்கள் சந்திப்பு இயக்கமாக நடத்துகிறோம். அதாவது மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துப் பெற்று, அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்யத்தான் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.

2021ஆம் ஆண்டில் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தும் நாங்கள் அதனைச் செய்வோம். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் எனப் பலரும் திமுகவின் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டு தோல்வியுற்றுத் திரும்பினர்.

திமுகவின் மீதான மக்களின் நம்பிக்கைதான் வென்றது. அதைப்போல, வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோற்பது உறுதி.

திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னச்சாமி

அந்த வகையில், இன்று கரூரில் தொடங்கும் விடியலை நோக்கிய திமுகவின் பரப்புரைப் பயணமானது, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்று நன்றி தெரிவிக்கும்போதுதான் நிறைவடையும்” எனத் தெரிவித்தார்.

இதன்போது அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். மணியன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : 'காதுகளில் பூ சுத்தாதே' - விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.