ETV Bharat / state

நலத்திட்ட உதவிகள் வழங்கி விஷால் பிறந்த நாள் கொண்டாட்டம்

author img

By

Published : Aug 29, 2020, 5:10 PM IST

கரூர்: விஷால் நற்பணி இயக்கம் சார்பில் 100 முதியோருக்கு காலை சிற்றுண்டி வழங்கி விஷால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விஷால் பர்த்டே
விஷால் பர்த்டே

நடிகர் விஷால் இன்று (ஆக. 29) தன்னுடைய 43ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கரூர் மாவட்ட புரட்சித் தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில், கரூர் அருகே உள்ள புன்னம்சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் மாவட்டத் தலைவர் விஷால் ராஜேஷ் தலைமையில் 100 முதியோருக்கு காலை சிற்றுண்டி வழங்கி விஷால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ வேம்பு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கரூர் மாரியம்மன் திருக்கோயில்களில் விஷால் பெயரில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கரூர் ரெயின்போ ரத்த வங்கியில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட விஷால் ரசிகர் மன்ற இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.