கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ”ஃபெமரல் ஹெர்னியா"என்ற குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற க நோய் வந்தால் உயிர் பிழைப்பது மிகவும் அரிதான செயலாகும்.
அதுவும் வயது முதிர்ந்த பெண்களுக்கு வரும்போது உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும். இவை அனைத்தையும் தாண்டி 95 வயது மூதாட்டியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவிக்கையில், ”கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வயிற்றுவலி காரணமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த 96 வயது மூதாட்டி "ஃபெமரல் ஹெர்னியா" என்ற அரிதான குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதை மருத்துவக்க ல்லூரி மருத்துவர்கள் கலந்தாலோசித்து இரண்டு மணி நேரத்தில் அவருக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்து, வயது முதிர்ந்த மூதாட்டி உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிமொழியிடம் கதறி அழுத கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்!