கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், கரூர் மாவட்டத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்களில் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுப்பி வைக்க போதிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களில் சொந்த மாநிலத்திற்குச செல்ல விருப்பம் உள்ளவர்களை, வழியனுப்பி வைக்கும் நிகழ்வு புகளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிகார் மாநிலத்தைச் சேந்த 604 தொழிலாளர்களை 16 பேருந்துகளின் மூலம் நாமக்கல் மாவட்டம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்து கொண்டு அவர்கள் சென்ற பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசு அறிவித்த நிதி எல்லாம் காகிதத்தில் தான் இருக்கிறது'