கன்னியாகுமரி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குளச்சல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்பர் கிரீஸ் என்ற பொருளை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதையடுத்து விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கைது செய்யப்பட்டனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் குளச்சல் பகுதியை சேர்ந்த டேனியல், மண்டைக்காடு பகுதியை சேர்ந்த அரவிந்த், உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பிபின், திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஜெனித் மற்றும் அஜித் என்பதும் தெரியவந்தது.
மேலும் இளைஞர்கள் 5 பேரும் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் என்ற பொருளை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்