ETV Bharat / state

சுவாமிதோப்பு அருகே இளம் பெண் மாயம்! - kanniyakumari latest news'

கன்னியாகுமரி: சுவாமிதோப்பு அருகே இளம் பெண் மாயமானதை தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

young-girl-missing
young-girl-missing
author img

By

Published : Oct 8, 2020, 12:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அடுத்துள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் ஏஞ்சல் (21). இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது படுக்கையறைக்கு சென்று தூங்கியுள்ளார். இன்று காலை முதல் அவரை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஏஞ்சலை பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ஏஞ்சலின் தாயார் ஜெயபதி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஏஞ்சல் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே ஏஞ்சல் தனது காதலன் அரவிந்துடன் சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு -ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.