ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த அரசு உதவும் - பிரசாந்த் வடநேரே

கன்னியாகுமரி: மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் நல்ல நிலையுடன் வாழ்வதற்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவி செய்யும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, world handicapped day
world handicapped day
author img

By

Published : Jan 25, 2020, 8:30 AM IST

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட நேரே தொடங்கிவைத்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவர், அவர்களுக்குள் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் முன்பு பேசிய அவர், ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதியை உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் உலக மாற்றுத்திறனாளிகள் நாளை அரசு சார்பாக கொண்டாட இயலவில்லை. எனவே, இன்று உலக மாற்றுத்திறனாளிகள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உலக மாற்றுத்திறனாளிகள் விழா

அரசின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையினை பெறுவதற்கு பஞ்சாயத்து அளவில் முகாம்கள் நடத்தப்படுகிறது.

இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களை சமர்பித்து, அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அடையாள அட்டை எதிர்காலத்தில், மாற்றுத்திறனாளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

குமரியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மாற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் நல்ல நிலையுடன் வாழ்வதற்கு தேவைான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகவும் தொடர்ந்து வழங்கிவருகிறது என்றார்.

இதையும் படிங்க: 'வெள்ளை யானை' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தனுஷ்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள எஸ் எல் வி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா கொண்டாட்டம். கலெக்டர் பங்கேற்பு.

Body:குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்துறை சார்பில்
நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வட நேரே தொடங்கி வைத்தார்.
பின்னர் , மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவர், அவர்களுக்குள் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் டிசம்பர் 3-ம் நாள் தேதியை உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக அறிவித்துள்ளது. நமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் உலக மாற்றுத்திறனாளிகள் நாளை
அரசு சார்பாக கொண்டாட இயலவில்லை.

எனவே, இன்று உலக
மாற்றுத்திறனாளிகள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையினை பெறுவதற்கு பஞ்சாயத்து அளவில் முகாம்கள் நடத்தப்படகிறது.

இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள்
உரிய ஆவணங்களை சமர்பித்து, அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அடையாள
அட்டையினை எதிர்காலத்தில்,
மாற்றுத்திறனாளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இந்த அடையாள அட்டை மிகவும்
முக்கியமானதாகும்.

குமரியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க தேவையான
வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மாற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் நல்ல நிலையுடன் வாழ்வதற்கு தேவைான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகவும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.