ETV Bharat / state

ஆன்லைனில் முதலீடு செய்ய பணம் தர மறுத்த கணவன்- மனைவி தற்கொலை

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Women suicide in kanyakumari
Online business
author img

By

Published : Dec 11, 2020, 2:39 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (32) மர வேலை செய்து வருகிறார், இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நந்தினியின் தோழிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ஆன்லைன் மூலம் பணத்தை முதலீடு செய்து அதிகளவு சம்பாதிக்கலாம் என்று நந்தினியிடம் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய நந்தினி கணவனிடம் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். இதை நம்பாத ரூபன் இது மோசடியாக இருக்கும் இதில் முதலீடு செய்ய நான் பணம் தர மாட்டேன் என்று கூறியுள்ளார், இதனால் நந்தினி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (டிச. 10) இரவு அனைவரும் தூங்கிய பிறகு நந்தினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் நந்தினியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.