கன்னியாகுமரி: வன உயிரின சரணாலயத்தில் 2021-2022ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.
கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்திற்கு உள்பட்ட பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், குளியல் ஆகிய வனச்சரகத்திற்கு உள்பட்ட 26 பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு 4 நபர்கள் என்ற கணக்கில் 100 நபர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தப் பணி இன்று முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. மேலும், இப்பணியில், நாகர்கோவில் ஸ்காட், ஹிந்து கல்லூரி மாணவர்களும் ஊட்டி வன உயிரியல் கல்லூரி மாணவ- மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவும் வனப் பகுதிகளுக்குள் சென்று நேரடியாக பறவைகள், வன விலங்குகளை கண்டறிந்து கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்கு: விழிப்புணர்வில் வனத்துறை