குமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பழத்தோட்டம் அருகே தமிழ்நாடு வேளாண்மை துறையின் சார்பில் 'ECO PARK' என்ற சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.
பூங்காவின் நுழைவாயிலில் அனைவரையும் கவரும் வகையில் மிகப்பெரிய ராட்சத வலம்புரி சங்கு அமைக்கபட்டுள்ளது. அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் அரிய வகை மரங்கள், செடிகள் நிறைந்த பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வந்தால் நீண்ட நேரம் பார்த்து மகிழும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்த சுற்றுச்சூழல் பூங்காவில் காதல் ஜோடிகள் உள்ளே வந்து அத்துமீறும் செயல்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பள்ளி மாணவ - மாணவிகளை இந்தப் பூங்காவிற்கு அழைத்துவரும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
எனவே, இது போன்ற பொது இடங்களில் நடக்கும் அத்துமீறல் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை ரத்து செய்யக்கோரிய வழக்கு: இன்று விசாரணை!