ETV Bharat / state

முடி திருத்தும் ஊழியருக்கு பளார் - போதை ஆசாமியின் வெறிச்செயல்! - Drunk Man Slaps Hairdresser

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முடி திருத்தும் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர் மீது குடிபோதையில் வந்த நபர்கள் கன்னத்தில் தாக்கும் வீடியோ வைரலானது.

முடி திருத்தும் கடை ஊழியரை குடிபோதையில் வந்த நபர் கன்னத்தில் அறையும் வீடியோ வைரல்

author img

By

Published : Nov 16, 2022, 6:25 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு புகுந்து தாக்குவது, சாலையில் செல்வோர்களை அத்துமீறி தாக்குவது, கடையில் பணிபுரிபவர்களை உள்ளே புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. காவல்துறை ரோந்துப் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வே, இது போன்ற குற்றச்சம்பவங்களுக்கு காரணம் எனப் பரவலான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அந்த வகையில், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் செயல்பட்டு வரும் முடி திருத்தும் கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியரை திடீரென மது போதையில் வந்த நபர், கன்னத்தில் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

முடி திருத்தும் ஊழியருக்கு பளார் - போதை ஆசாமியின் வெறிச்செயல்

எந்த காரணமும் இல்லாமல் இது போன்ற தாக்குதல்கள் அத்துமீறி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை ஊழியர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்த கணவன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.