கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே அரசு நகரப்பேருந்தில் நடத்துநர் சிகரெட் குடித்த காட்சிகள் வைரல் ஆகி வரும் நிலையில், அரசு போக்குவரத்துத்துறை அலுவலர்கள் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக்கழக நகரப்பேருந்து ஒன்று பணச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றபோது அப்பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் புகைபிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றன. இச்சம்பவம் கடந்த 30ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் கொரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா பறிமுதல்