ETV Bharat / state

கரோனா ஒழிய யாகம் நடத்திய காங்கிரஸ் எம்.பி! - mp Vasanthakumar

கன்னியாகுமரி: கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியும், நோயின் பிடியிலிருந்து மக்கள் மீள வேண்டியும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் வேள்வி யாகம் நடத்தினார்.

vasantha kumar
vasantha kumar
author img

By

Published : May 18, 2020, 12:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மிகவும் பிரசித்திப்பெற்ற காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு கன்னியாகுமரி மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று உலகிலிருந்து மறையவும், மக்கள் அனைவரும் இந்தக் கொடிய உயிர்க்கொல்லி நோயின் பிடியிலிருந்து மீளவும் காணிமடம் மந்திராலயத்தில் ”லோக ஷேம யாகம்” உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள், வேள்விகளை மந்திராலய குரு நாம ரிஷி பொன் தபஸ்வி காமராஜ் சுவாமிகள் நடத்தினார். மேலும் 48 நாள்கள் மவுன விரதமிருந்து ஒற்றைக்கால் தவத்திலும் அவர் ஈடுபட்டார்.

இது குறித்து அறிந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், இன்று காலை மந்திராலயத்திற்கு வந்தார். அவரை மந்திராலய குரு நாம ரிஷி பொன் காமராஜ் சுவாமிகள் வரவேற்றார்.

அதன் பிறகு, கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க வேண்டி, வசந்தகுமார் காணிமடம் மந்திராலயத்தில் தன்வந்திரி வேள்வி யாகம் நடத்தினார்.

இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு கார்ட்டூன் ஓவியங்கள்: தேனி இளைஞர் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.