கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜன.06) நாகர்கோவில் வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'கொள்கைக்காக, கோரிக்கைக்காக சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு என்று 3 முறை கூறி சூட்டப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என ஆணவத்தின் உச்சகட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும்.
தவறாகப்பேசி விட்டேன் என்று அவர் கூற வேண்டும். ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநரை இயக்குவது சங் பரிவார், அவர்களின் ஊது குழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்' என விமர்சித்தார். தொடர்ந்து அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு "நல்லா இருக்கு" என கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு விவகாரம்: ஆர்.என்.ரவி கூறியதில் தவறில்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச்