ஆண்டுதோறும் கார்த்திகை 1ஆம் தேதி முதல் கிறிஸ்து பிறப்பு வரை கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு நேரத்தில் பிரார்த்தனை ஜெப ஊர்வலம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது.
இதில் ஆலயங்களிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேண்ட் கருவிகளை இசைத்தபடி கிறிஸ்தவ பாடல்களை சாலைகளில் பாடியவாறு சபையை சேர்ந்த உறுப்பினர் வீடுகளுக்கு சென்று இறை வேண்டல் செய்வர்.
இதன் ஒரு பகுதியாக தென்தாமரைகுளம், கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள 3 சிஎஸ்ஐ ஆலயங்களைச் சேர்ந்தவர்களும், புனித பனிமய அன்னை ஆலய பங்கைச் சேர்ந்தவர்களும் 2 பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த 6 சபைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஐக்கிய கிறிஸ்மஸ் விழாவை கிறிஸ்தவ இளைஞர் இயக்கம் சார்பில் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்த விழாவில் 6 சபைகளைச் சேர்ந்த போதகர்கள், பங்கு தந்தைகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்று கூடி பாடல்களைப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
இதில் கிறிஸ்தவ இளைஞர் இயக்கத்தின் சார்பில் 6 சபைகளிலுள்ள ஏழைகளுக்காக நலத்திட்ட உதவிகளுக்காக ரொக்க பணம் வழங்கப்பட்டது. அதனை அந்தந்த சபைகளைச் சேர்ந்த போதகர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'