ETV Bharat / state

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் உடைப்பு - கொள்ளை முயற்சியா???

கன்னியாகுமரி: இறச்சகுளம்,  நாவல்காடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் அறைகளின் கண்ணாடிகளை செங்கல்கள், கற்களை கொண்டு அடையாளம் தெரியாத நபர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் உடைப்பு
author img

By

Published : Jul 31, 2019, 9:46 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம், நாவல்காடு பகுதியில் மக்களின் வசதிக்காக SBI வங்கி ஏடிஎம், ஃபெடரல் வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்தபோது இரண்டு ஏடிஎம் அறைகளின் கண்ணாடிகள் செங்கல்கள், கற்களை கொண்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி காவல் துறையினர் ஏடிஎம் அறைகளை ஆய்வு செய்தனர். பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் உடைப்பு

ஒரே நாளில் இரண்டு ஏடிஎம்களின் கண்ணாடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதிகளில் இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ திருடப்பட்டுள்ளது. இப்பகுதியில், அடுத்தடுத்து நடைபெற்றுவரும் குற்ற சம்பங்களால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், ஏடிஎம்களில் காவலாளிகள் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே உடனடியாக காவலாளிகளை நியமிக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் மற்றும் நாவல்காடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் அமைந்துள்ள அறைகளின் கண்ணாடிகளை செங்கல்கள் மற்றும் கற்களை கொண்டு உடைப்பு. ஏடிஎம் ல் கொள்ளை முயற்சியா என பொதுமக்கள் அச்சம்.காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களில் காவலாளிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.Body:tn_knk_02_atm_broken_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் மற்றும் நாவல்காடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் அமைந்துள்ள அறைகளின் கண்ணாடிகளை செங்கல்கள் மற்றும் கற்களை கொண்டு உடைப்பு. ஏடிஎம் ல் கொள்ளை முயற்சியா என பொதுமக்கள் அச்சம்.காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களில் காவலாளிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் SBI வங்கி செயல்பட்டு வருகிறது. அதற்க்கு அருகிலேயே வாடிக்கையாளர் வசதிக்காக ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் இறச்சகுளம் அருகில் உள்ள நாவல்காடு பகுதியிலும் பெடரல் வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் அமைந்துள்ள அறைகளின் கதவுகளையும் மர்மநபர்கள் இன்று அதிகாலையில் செங்கல்கள் மற்றும் கற்களை கொண்டு அடுத்தடுத்து உடைத்துள்ளளார்கள். இதனை தொடர்ந்து இன்று காலை இரண்டு ஏடிஎம்களிலும் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அறைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்கள். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த பூதப்பாண்டி போலிஸார் இரண்டு ஏடிஎம்களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயன்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள்.அடுத்தடுத்தீ இரண்டு ஏடிஎம் களின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதிகளில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்றார்கள். எனவே இறச்சகுளம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குற்ற சம்பங்கள் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களில் உடணடியாக காவலாளிகளை நியமிக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்தார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.