கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நள்ளிரவில் தொலைக்காட்சி வெடித்து 3 வீடுகள் தீக்கிரையாகின.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உள்ள பகுதியில் வசந்தகுமார் என்பவர் நேற்றிரவு தன் வீட்டில் குடும்பத்தினருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய நிலையில் தொலைக்காட்சியின் மின் இணைப்பை துண்டிக்காமல் இருந்துள்ளனர். இதனால் நள்ளிரவிலும் இயங்கி கொண்டிருந்த தொலைக்காட்சி, திடீரென வெடித்து வீட்டில் தீ பற்றி எரிந்தது.
அதைத் தொடர்ந்து வசந்தகுமாரின் வீட்டை ஒட்டியுள்ள டேனியல், அந்தோணி ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கும் தீப்பரவியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்ட வீட்டினரும் மேற்கொண்ட முயற்சியால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆகினும், மின்சாதன பொருட்கள் உட்பட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திப்ருகார் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள்!