கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் அலுவலகத்தை சமூக சேவகர் டிராபிக் ராமசாமி திறந்துவைத்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. புதிய கல்விக் கொள்கை தற்போது தேவை இல்லை” என்றார்.
இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடியை பார்த்து 'ஏன் பிறந்தாய் மகனே' எனும் கேள்வி கேட்கும் நிலையில்தான் அவர் உள்ளார். அவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருவரும் துரோகிகள், அவர்களை மகாத்மா காந்தி மக்கள் கட்சி திருத்தும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற அரசு அலுவலர்கள் தான் அரசியல் வாதிகளுக்கு ஊழலை கற்றுக்கொடுக்கின்றனர். காவி வேட்டி கட்டிக்கொண்டு கோயில் கட்டிக்கொண்டு கொள்ளையடிப்பது தொடர்ந்து நடக்கிறது. பெரியார் கொள்கைகளை மிதித்து தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்ச பிறந்தநாள் வாழ்த்து!