கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் செட்டிக்குளம் - கோட்டார் சந்திப்பு உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்பட்டது.
இதனால், பல்வேறு விபத்துகள் நடைபெற்று வந்தன. அதேபோல், மழை நேரங்களில் இந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில், துணை ஆய்வாளர் செல்லசுவாமி உள்ளிட்ட போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், தங்கள் சொந்த செலவில் ஜல்லி கொண்டு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளமான இடங்களில், கொட்டி பள்ளங்களை சீர் செய்தனர். இதையடுத்து, குண்டும் குழியுமான, இப்பகுதி சாலைப் போக்குவரத்திற்கு பயன்படும் அளவிற்கு சீரமைக்கப்பட்டது.
இதையும் படிங்க:தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை - வாகன ஓட்டிகள் அவதி