ETV Bharat / state

சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் தொடங்கியது! - கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரியில் மீண்டும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் பணித் தொடங்கியது. கடந்த ஆண்டை விட ரூ.43 லட்சம் ஏலத் தொகை குறைந்ததால் பேரூராட்சி நிர்வாகமே வசூலில் இறங்கியுள்ளது.

Tourist vehicle entry fee in kanyakumari

author img

By

Published : Mar 1, 2021, 12:55 PM IST

கன்னியாகுமரி: மாவட்டத்திற்குள் நுழையும் சுற்றுலா வாகனங்களுக்குப் பேரூராட்சி நிர்வாகமே நுழைவுக் கட்டணம் வசூல் செய்யத் தொடங்கியுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முதல் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது 11 மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டு, நிலைமை ஓரளவு சீரடைந்து வரும் நிலையில், தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

மொழிபெயர்ப்பில் சொதப்பிய ஹெச்.ராஜா - மேடையிலேயே எச்சரித்த அமித் ஷா!

இதனைத் தொடர்ந்து சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்யப் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமையைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கியது. கடந்தாண்டு ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போன வரி வசூல் உரிமம் இந்த முறை வெறும் ரூ.27 லட்ச ரூபாய்க்கு மட்டுமே கேட்கப்பட்டது.

Tourist vehicle entry fee in kanyakumari
சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம்

இதனால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பேரூராட்சி நிர்வாகம் நேரடியாகக் கட்டண வசூல் செய்ய முடிவு செய்தது. அதன்படி இன்று (மார்ச்1) முதல் இந்த முறை அமலுக்கு வந்தது. தற்போது, பேருந்து நுழைவுக் கட்டணம் ரூ.100 ரூபாய், வேன் ரூ.70 ரூபாய், கார் ரூ.50 என வசூலிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.