ETV Bharat / state

குமரியில் படகுப் போக்குவரத்து ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

author img

By

Published : Oct 30, 2019, 4:17 PM IST

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

sea rough

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குமரிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக குமரியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் அலைகளும் பல அடி உயரத்துக்கு எழுகின்றன.

இதன் எதிரொலியாக, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் பூம்புகார் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தபோதும், படகுப் போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் வரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

sea rough

மேலும், குமரி கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத் துறை எச்சரித்துள்ளதை அடுத்து, ஆரோக்கியபுரம் முதல் மணக்குடி வரையிலான கடல் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Intro:கன்னியாகுமரி கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வரிசையில் நின்று வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. Body:tn_knk_03_searough_boatingstop_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வரிசையில் நின்று வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

உலக சுற்றுலா தளங்களில் மிகவும் புகழ் பெற்றது கன்னியாகுமரி. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ரசிப்பதற்காகவே ஆவலுடன் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குமரிக்கு வருவார்கள் . இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே குமரி கடல் பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் அலைகளும் பல அடி உயரத்திற்க்கு எழும்புகின்றது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பூம்புகார் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால். கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கண்டு ரசிப்பதற்காக குமரிக்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். அவர்கள் படகு போக்குவரத்து மறுபடியும் இயக்கப்படும் என்ற ஆவலுடன் வரிசையில் சோகத்தில் நின்று வருகின்றனர்.

மேலும் குமரி கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளதையடுத்து கன்னியாகுமரி கடல் பகுதியான ஆரோக்கியபுரம் முதல் மணக்குடி வரையிலான சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை. சின்ன முட்டம் மீன்பிடித்துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே 40 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருவதால் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.