ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

author img

By

Published : Sep 2, 2020, 11:59 PM IST

கன்னியாகுமரி: பார்வதிபுரம் பகுதியிலுள்ள விடுதியில் பாலியல் தொழில் செய்த ஒரு பெண் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!
Kanniyakumari sex workers arrested

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆய்வாளர் சாய்லட்சுமி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

பின்னர், அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு மீட்கப்பட்ட பெண் மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட இரண்டு பேரில் ஒருவர் பெருவிளையைச் சேர்ந்த கண்ணன் (42), மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.