ETV Bharat / state

தோவாளை சந்தை பூக்கள் விற்பனை உயர்வு - வியாபாரிகள் மகிழ்ச்சி - தோவாளை சந்தைக்கு ஐய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி

தோவாளை சந்தைக்கு ஐய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி
தோவாளை சந்தை பூக்கள் விற்பனை
author img

By

Published : Nov 27, 2019, 11:08 PM IST

கன்னியாகுமரி: தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இங்கு, தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல ’டன்’ பூக்கள் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் தோவாளை சந்தையில் இருந்தும் கேரளம் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்பொழுது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசனையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்னை நிலவியதால் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணியவில்லை. ஆனால், இந்த ஆண்டு சற்று அமைதியான சூழல் நிலவுவதால் அதிகளவில் பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கான பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை 1000 ரூபாய்க்கும், பிச்சி 250 இல் இருந்து 750 ரூபாய்க்கும், கேந்தி 40 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.மேலும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விற்பனையே ஆகாமல் இருந்த அரளிப்பூ தற்போது, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் சபரி மலை மண்டல பூஜைக் காலத்தில், பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் - வருமானம் அதிகரிப்பு!

Intro:சபரி மலை ஐயப்பன் சீசனையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்ப்பனை சூடு பிடித்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் ஐய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பூக்கள் வாங்க சந்தைக்கு வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி. பூக்கள் விலையும் கடந்த ஐய்யப்ப கால சீசனை விட விலை அதிகம்.Body:tn_knk_02_thovalai_flower_market_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
சபரி மலை ஐயப்பன் சீசனையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்ப்பனை சூடு பிடித்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் ஐய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பூக்கள் வாங்க சந்தைக்கு வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி. பூக்கள் விலையும் கடந்த ஐய்யப்ப கால சீசனை விட விலை அதிகம்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழக அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும் இங்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல டன் பூக்கள் விற்ப்பனைக்கு வரும் அதேப்போல் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளான இலங்கை மலேசியா சிங்கபூர் போன்ற வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கார்த்திகை மாதம் ஐய்யப்ப சீசனையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது தொடர்பான பிரச்சனை நிலவியதால் பெரும்பாலான ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணியவில்லை . ஆனால் இந்த ஆண்டு சற்று அமைதியான சூழ்நிலை நிலவுவதால் அதிக அளவில் பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ளார்கள். இதனால் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளதால் பூக்களிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடந்த ஆண்டு ஐய்யப்ப சீனனை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி 1000 ரூபாய்க்கும் பிச்சி 250 ல் இருந்து 750 ரூபாய்க்கும் கேந்தி 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் சம்பங்கி 70 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கும் ரோஜா 60 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும் கடந்த ஆண்டு விற்பனையே ஆகாமல் இருந்த அரளி தற்போழுது 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் சபரி மலை மண்டல பூஜை காலத்தில் பூக்களின் விலை மேலும் உயர வாய்புள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.