ETV Bharat / state

'அநாகரிகத்தின் அடையாளம் ஹெச்.ராஜா' - திருமாவளவன்

அநாகரிகத்தின் அடையாளமாக ஹெச்.ராஜா திகழ்கிறார் என நாங்குநேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கடுமையாக சாடினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 20, 2023, 10:23 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்

கன்னியாகுமரி: சாமிதோப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் இருந்து காரில் சாமிதோப்பிற்கு சென்றார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது களக்காடு அருகே வேதநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள், இடுகாட்டு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருமாவளவனிடம் மனு அளித்தனர். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்கள் குறித்து அவ்வப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு முறைகளை ஒழிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.

ஹெச்.ராஜா, திருமாவளவன் நாக்கை துண்டிப்போம் என்று பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் அநாகரிகத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்” என்று கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.