கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் காவலர்கள் லட்சுமிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒருவரை விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அந்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஈத்தாமொழியை அடுத்த ஆடறவிளையைச் சேர்ந்த சுதன் (32) என்பதும், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி, பூதப்பாண்டி, ராஜாக்கமங்கலம், வெள்ளிசந்தை, இரணியல் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள் மீட்டனர். மேலும் அவர் வழிப்பறிக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'லிப்ட் கொடுத்து' பணத்தை அபேஸ் செய்த பலே திருடன் !