கன்னியாகுமரி மாவட்டம், மலையோரக் கிராமமான குற்றியார் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் 11 அடி ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தைக் கேட்ட நாகம் அருகில் இருந்த அங்கன்வாடி கட்டடத்திற்குள் நுழைந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, அங்கன்வாடி கட்டடத்திற்குள் மறைந்து கொண்டிருந்த ராஜநாகத்தைப் பிடித்து வெளியே கொண்டுவந்தனர்.
அரியவகை ராஜநாகம் என்பதால், பக்கத்து கிராமங்களில் இருந்து நாகத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: 'கடிக்கு கடி' ஒரு தடவை கடித்த பாம்பை... இரண்டு முறை கடித்த மகாராஷ்டிரவாசி!