குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோயில்களில் அரங்கேறும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முந்தினம் (ஆக.17) நாகர்கோவில் அருகேவுள்ள சரக்கல்விளை நீலவேணி அம்மன் கோவில் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலி, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு (ஆக.18) அடையாளம் தெரியாத நபர்கள், ஆட்சியர் அலுவலக சாலையிலுள்ள வேட்டாளியம்மன் கோயில் கதவை உடைத்தும், உண்டியலிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் கோவிலுக்குள் கொள்ளையர் புகுந்து திருடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகிவுள்ளன.
அதில் பதிவாகியுள்ள உருவத்தை அடிப்படையாகக் கொண்டு கோட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை!