இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவ நிர்வாகிகள் பங்கு தந்தைகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரை 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய மீனவர் சமுதாயம் நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய வசந்தகுமார் கூறியதாவது, நான் வெற்றி பெற்றால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த பகுதியில் கொண்டு வர விடமாட்டேன்.
மேலும் என்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 20% தொகையை மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக வழங்குவேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய இருக்கின்ற சரக்கு பெட்டக மாற்று முனையம் சம்பந்தமாக பாராளமன்றத்தில் பரிசீலனையில் வரும்போது அது குமரி மாவட்டத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்துவேன் என்றும் வசந்தகுமார் உறுதி அளித்தார்.