ETV Bharat / state

போலி நிதி நிறுவனம் மூலம் ரூ. 10 கோடி மோசடி: நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை! - kanyakumari money cheating issue

குமரி: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ. 10 கோடி வரை மோசடி செய்த மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை
நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை
author img

By

Published : Jan 5, 2020, 7:16 AM IST

தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 'சன் ஸ்டார் அக்ரோ பார்ம்' நிதி நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து 600 பேர் மாதாந்திர தவணைமுறையில் பணம் செலுத்திவந்தனர்.

இந்நிலையில், அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பணம் செலுத்திவந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போலியான நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்திருப்பது கடைசியாகத்தான் பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் செய்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல நபர்களிடமிருந்து ரூ. 10 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தை நடத்தி மக்களை ஏமாற்றிய பிரவீன், பேச்சிப்பாறையைச் சார்ந்த சோபன், ரதீஷ் ஆகிய மூவரை காவல் துறைனர் கைதுசெய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது, நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை மதுரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவர்களை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை கொள்ளை!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் முக்கிய குற்றவாளியை மதுரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:tn_knk_02_arrested_financial_fraud_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் முக்கிய குற்றவாளியை மதுரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் சன் ஸ்டார் அக்ரோ பார்ம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு, இந்த நிறுவனத்தில் சுமார் 1600 பேர் மாதாந்திர தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர் இந்நிலையில் செலுத்திய தொகை முதிர்ச்சி அடைந்ததும் பணம் பெற சார்ந்தவர் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் சுமார் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தை நடத்தி வந்த பிரவீன், பேச்சிபாறை சார்ந்த சோபன், ரதீஷ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதுரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.