ETV Bharat / state

பழுதான அதிநவீன படகுகள் சீரமைப்பு: கண்காணிப்பு பணி தீவிரம்

கன்னியாகுமரி: கடலோரக் காவல் படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன படகுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன படகுகள்
author img

By

Published : Oct 18, 2019, 10:26 AM IST

Updated : Oct 18, 2019, 11:14 AM IST

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுதலை தடுக்கவும், கடல் வழிக் குற்றங்களை கண்காணிக்கவும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு நான்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டன.

இந்த அதிநவீன படகுகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கடலோர பகுதியை கண்காணிக்கும் பணியில் மெரைன் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு அதிநவீன படகுகளும் பழுதானதால் மீனவர்களிடம் இருந்து வாடகைக்கு படகை எடுத்து கடலோர பகுதிகளை மெரைன் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பழுதான படகுகளில் 2 நவீன படகுகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கடலோர பகுதிகளில் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு அதிநவீன படகுகளும் பழுதாகின. படகுகள் பழுதால் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு, அதிநவீன படகுகளை சீரமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சீர்செய்யப்பட்ட படகு
சீர்செய்யப்பட்ட படகு

கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், முதல் கட்டமாக 2 படகுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 படகுகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும். சீரமைக்கப்பட்ட படகுகள் கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!

Intro:கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பழுதடைந்த 4 அதிநவீன படகுகள் ரூபாய் 18 லட்சம் செலவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் தீவிர ரோந்து பணி துவக்கம்.Body:tn_knk_04_coast_guard_boat_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பழுதடைந்த 4 அதிநவீன படகுகள் ரூபாய் 18 லட்சம் செலவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் தீவிர ரோந்து பணி துவக்கம்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், கடல் வழி குற்றங்களை கண்காணிக்கவும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு 4 அதிநவீன படகுகள் வழங்கப்பட்டன.

இந்த அதிநவீன படகுகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கடலோர பகுதியை கண்காணிக்கும் பணியில் மெரைன் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த 4 அதிநவீன படகுகளும் பழுதாகியதால் மீனவர்களிடம் இருந்து வாடகைக்கு படகை எடுத்து கடலோர பகுதிகளை மெரைன் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பழுதான படகுகளில் 2 நவீன படகுகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இன்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கடலோர பகுதிகளில் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 4 அதி நவீன படகுகளும் பழுதாகின. படகுகள் பழுதால் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு, அதிநவீன படகுகளை சீரமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், முதல் கட்டமாக 2 படகுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 2 படகுகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும்.சீரமைக்கப்பட்ட படகுகள் இன்று முதல் கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கன்னியாகுமரி மெரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், சீரமைக்கப்பட்ட 2 அதிநவீன படகுகளில், மெரைன் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் நாகராஜன், நீலமணி, சுடலைமணி, ஏட்டுக்கள் அனில்குமார், விஜயகுமார், கிங்ஸ்லி ஆகியோர் கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக தென்படும் விசைபடகுகள், பைபர் படகு, நாட்டுப்படகுகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்தும் உடனடியாக தகவல் வழங்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Conclusion:
Last Updated : Oct 18, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.