ETV Bharat / state

தந்தையை கொன்ற மகனுக்கு 10ஆண்டு சிறை. - தந்தை கழுத்தறுத்து கொலை

கன்னியாகுமரி: பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காததால், மது போதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நாகர்கோவில் நீதிமன்றம்.

கன்னியாகுமரி
author img

By

Published : Aug 17, 2019, 11:32 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், வேங்கவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). இவரது மகன் வினு (34) கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த காரணத்தால் இவரது மனைவி சிலவருடங்களுக்கு முன்பு இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் வினு, தனது பெற்றோரிடம் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு குடி போதையில் இருந்த வினு தனது தந்தை செல்வராஜிடம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது வினு திடீரென வீட்டில் இருந்த கத்தியால், தனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக, களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினுவை கைது செய்தனர்.

தந்தையை கொன்ற மகனுக்கு 10ஆண்டு சிறை.

இந்த கொலைவழக்கு நாகர்கோவில் முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், வினுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பிரிந்து சென்ற மனைவியை
தன்னுடன் சேர்த்து வைக்காததால், மது போதையில் தந்தையை கழுத்தறுத்து
கொன்ற மகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து
நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.Body:குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே வேங்கவிளையைச் சேர்ந்தவர்
செல்வராஜ் 60. இவரது மகன் வினு 34. கூலி தொழிலாளி. குடி பழக்கத்துக்கு
அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதில் வினுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இரு
குழந்தைகளுடன் தனியே பிரிந்து சென்றுவிட்டார்.
அதன் பிறகு வினு, தனது பெற்றோரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு
வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தனது தந்தை
செல்வராஜிடம் குடி போதையில், தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த கத்தியால், தந்தையின் கழுத்தை அறுத்து
கொலை செய்தான். இது தொடர்பாக, களியக்காவிளை போலீசார் வழக்கு
பதிவு செய்து வினுவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில்
நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கோமதிநாயகம்,
குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி
அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், வினுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில்
வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.