ETV Bharat / state

அம்பேத்கரின் பேனாவிற்கே சிலை இல்லை... கடலுக்குள் கட்டுமரம் வையுங்கள் - சீமான்

நாட்டில் அம்பேத்கரின் பேனாவிற்கே சிலை இல்லாத நிலையில், கருணாநிதிக்கு கடலுக்குள் கட்டுமரம் வையுங்கள் எனவும்; பேனா வைக்க முயற்சிப்பது அதானி துறைமுகத்திற்கு அனுமதி கிடைக்கவே எனவும்; தமிழ்நாட்டிற்குள் வரும் வட இந்தியர்களை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 6, 2023, 6:26 PM IST

அம்பேத்கரின் பேனாவிற்கே சிலை இல்லை; கடலுக்குள் கட்டுமரம் வையுங்கள் - சீமான்

கன்னியாகுமரி: வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு வருவது ஒருவித போர்த்தொடுப்பு எனவும்; அரை ஏக்கர் கடல்பரப்பில் சிலை வைத்தால், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உறவினர் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.6) பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம். மக்கள் மாற்றத்தை எண்ணிவிட்டால், அதை மக்களே செய்வார்கள். 'காசு ஒரு சுற்று நாங்கள் கொடுத்துவிட்டோம்' என எங்களிடமே ஆளும் கட்சியினர் சொல்கிறார்கள். 'கடைசி மூன்று நாட்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்' என்கிறார்கள்.

பணப் பட்டுவாடா?!: ஆளும் கட்சி என்பதால் எளிதாக பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. காங்கிரஸூடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமல் நினைக்கிறார். அது அவருடைய கொள்கை முடிவு. ஆனால், நான் தனியாகத்தான் நிற்பேன் என கொள்கைமுடிவு எடுத்திருக்கிறேன்.

ஏற்கனவே, கருணாநிதிக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அது அவரது எழுத்தையும், பேனாவையும் நினைவூட்டாதா? இல்லையென்றால், ஏன் சிலையை வைத்துள்ளீர்கள். அதுபோல, மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் வைத்திருக்கிறார்கள். அது அவரை நினைவூட்டாதா? கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள். கடலுக்குள் எதற்கு 137 அடியில் சிலை வைக்க வேண்டும்? இது தண்ட விரயம்.

அம்பேத்கர் பேனாவுக்கே சிலை இல்லை: இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக்கொடுத்த அம்பேத்கர் பேனாவுக்கே சிலை இல்லையே. காந்தியும், அம்பேத்கரும் நம் நாட்டின் அடையாளம். மலேசியா, சிங்கப்பூர் போனாலும்கூட பட்டேல் யார் என்றே தெரியாது. ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்க உதவினார் என்பதற்காக பட்டேலுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சிலை வைக்கும்போதே நாங்கள் எதிர்த்தோம்.

அதானி துறைமுகம்: காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்துக்கு 6,111 ஏக்கர் நிலத்தை விரிவாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என கையெழுத்திட்டது, இந்த பேனா தான். அரை ஏக்கர் கடலில் பேனா சிலை வைத்தால், அதை காரணம் காட்டி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடும் என்பதால் அதை செய்கிறார்கள். கடல் நாட்டுக்கு பொதுவானது.

வேண்டுமெனில் கடலில் 'கட்டுமரம்' வையுங்கள்: கடலில் தூக்கிவீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்றார் கருணாநிதி. அப்படியானால் கட்டுமரம் வையுங்கள். ஏன் பேனா சிலை வைக்கிறீர்கள். மீறி வைத்தால் அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன்.

அவர்கள் சிவாஜி சிலை, அதற்கு முன் கண்ணகி சிலையை தூக்கினார்கள். அதுபோல நாங்களும் பேனா சிலையை தூக்குவோம். பேனாவை உடைக்கும்போது என் கை பூப்பறிக்கபோகுமா? என சேகர் பாபு சொன்னதெல்லாம் பழைய வசனம். பூப்பறிக்கப் போவது, புளியங்கா பறிக்கப் போவது எல்லாம் நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே உள்ள டயலாக்கு.

கடற்கரை சுடுகாடு: உலகின் ஆறாவது பெரும் கடற்கரையை எப்படி சுடுகாடாக மாற்றினீர்கள். நீங்கள் இறக்க, இறக்க அடிக்கிக்கொண்டே போனால் கடற்கரை எங்கே இருக்கும். கல்லறை தானே இருக்கும். ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறேன். பேனா சிலை வைத்தால் அதற்கு எதிராகவும் போராடுவேன்.

நெல் மூட்டைகளுக்கு தார்ப்பாய்: ஒரு நினைவிடத்துக்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை தகரம் போட்டு பாதுகாக்க முடியாதா? அதிகபட்சமா தார்ப்பாய் போடுகிறார்கள். மதுவைப் பாதுகாக்க ஏசி ரூம் வைக்கிறீர்கள். தஞ்சையில் சேதமான பயிருக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் என்பது குறைவானது. வேளாண் சங்கங்கள் முடிவெடுத்து கூறும் இழப்பீட்டை வழங்க வேண்டும்.

தனித்தொட்டி முதலில் எதற்கு?: குடிநீரில் மனிதக் கழிவு கலந்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சின்ன கிராமத்தில் யார் கலந்தது என தெரியவில்லை என்கிறார்கள். எளிய மக்கள் என்றால் நீதி கிடைக்காதா? தாழ்த்தப்பட மக்களுக்கு என ஏன் தனியாக குடிநீர் தொட்டி கட்டுகிறீர்கள். பொது குடிநீர் தொட்டி வையுங்கள். இரட்டைக்குவளை முறை இன்னும் இருக்கிறது என்றால் நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

இதுவரை இருந்த துறைமுகத்தில் என்ன நடக்கவில்லை. புதிதாக துறைமுகம் கட்டினால் என்ன நடக்கும். எதை ஏற்றுமதி செய்வீர்கள், எதை இறக்குமதி செய்வீர்கள். மீத்தேனையும், மாட்டுக்கறியையும் ஏற்றுமதி செய்வீர்கள். திராவிட மாடல் வேடிக்கையானது. இலங்கையில் 12 மீனவர்களை ஒரே சங்கிலியில் இழுத்துக்கொண்டு போனார்கள். எந்த தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவுக்கு சாமி இருந்தால் போதும், எங்களுக்கு இந்த பூமி போதும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2 கோடி பேர் வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்கள். இங்குவந்து என் வேலையை பறிப்பார்கள், வாக்குரிமை கேட்பார்கள், தமிழர்களை நிலமற்ற கூலிகளாக்குவார்கள். இதுதான் இலங்கையிலும் நடந்தது.

தமிழ்நாட்டில் வேலை யாருக்கு?: தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் விசா போன்று அனுமதி எடுக்க வேண்டும். அவர், எங்கு தங்குவார், எத்தனை நாள் தங்குவார் என்ற விவரங்களை வாங்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களுக்கு நாம் போகும்போது அப்படித்தானே வங்கினார்கள். அதே சமயம் தமிழர்களுக்கு அடையாள அட்டை என்பது தண்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை என்கிறார். தமிழ் இளைஞர்களுக்கு வேலை எனச்சொல்லவில்லை.

சூரியன் கிழக்கில் உதிக்கும். அதுபோல, ஈரோடு கிழக்கில் சூரியன் உதிக்கும் என சொல்லியிருக்கிறார். சூரியன் ஈரோட்டில் நிற்கவே இல்லையே. கைதான் நிற்கிறது. அதுவும் மொட்டையான கையாக நிற்கிறது. இதுவரை சூரியன் நின்றது இல்லை. நேரடியாக மோத தயாராக இல்லாமல் அவர்களிடம் கட்டிவிட்டுட்டார்கள். ஆனால், நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிடுபவர்கள்தான் தேர்ச்சி அடைகிறார்கள். மக்கள் வளரவே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்களை களத்தில் நிறுத்துவோம். போட்டியிடுவோம், களத்தில் சண்டை செய்வோம்.

அண்ணாமலை பயம் வேண்டாம்: அண்ணாமலை எதையும் பேசவும் முடியாது, தீர்மானிக்கவும் முடியாது. மோடி, அமித்ஷா போன்ற எஜமானர்கள் இருக்கும்போது இங்கு அவர்களால் என்ன செய்ய முடியும். மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என நினைத்துக்கொண்டிருந்தோம். அது மோடியின் ஐந்து விரல்களாக இருக்கின்றன. தேவைப்பட்டால் மடக்கி நிமிர்க்கிறார். அண்ணாமலைக்கு Z பாதுகாப்பு கொடுக்கப்படிருக்கிறது. அவருக்கு யாரிடம் இருந்து ஆபத்து. சீனாவில் இருந்து ஆபத்து என்கிறார். சீனாவை அவ்வளவு கேவலமாக நினைக்கக்கூடாது.

உயிருக்கு பயந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கிறீர்கள், வாக்காளர்களை கட்டிபிடிக்கிறீர்கள். அதிகாரத்துக்கு வந்தபிறகு பாதுகாப்பு தேடுகிறீர்கள். அண்ணாமலை வீர மரபில் வந்தவர்தானே. காவல்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார். பயிற்சி எடுத்த அவர் பயப்படக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: நரியைப் போல தவிக்கும் பாஜக?! கே.எஸ்.அழகிரி கடும்விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.