ETV Bharat / sports

Champions Trophy 2025 Cancel: சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ரத்து? ஐசிசி அதிரடி முடிவு? - CHAMPIONS TROPHY 2025

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Representative Image (@ICC)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 12:32 PM IST

ஐதராபாத்: அடுத்த ஆண்டு பிபரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஒரு போதும் பாகிஸ்தான் பயணிக்கப் போவதில்லை, ஹபிரிட் மாடலில் போட்டியை நடத்துக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

அதேநேரம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பையை நடத்துவதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பனிப் போரே நிலவுவதால், மொத்தமாக தொடரையே ரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்க இன்னும் சரியாக 100 நாட்களே உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பைக்கான அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயார் செய்து விட்டது. இந்நிலையில், தொடரை ரத்து செய்யவோ அல்லது காலம் தாழ்த்தி நடத்தவோ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளின் பட்டியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் எனக் கூறப்படுகிறது. போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பாகிஸ்தான், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்து இசைந்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை ஏற்கனவே ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்துள்ளது. அந்த வரைவு அட்டவணை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் நடத்துவது குறித்து பிசிசிஐ பரிந்துரைக்கும் பட்சத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.

இதையும் படிங்க: யாராலும் முறியடிக்க முடியாத விராட் கோலியின் டாப் ரெக்கார்டுகள்! என்னென்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.