ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனத் தலைவர் ஜான் விக்டர்தாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 34 வகையான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இதில் முடிதிருத்தும் நிலையங்கள் இடம்பெறவில்லை.
குமரி மாவட்டத்தில் முடி திருத்தும் பணியில் சுமார் 3 ஆயிரம் கடைகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 144 தடை உத்தரவுக்குப் பிறகு அவர்கள் இதுவரை கடைகள் திறக்கவில்லை. இதனால் இவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியது. இதில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நிவாரணநிதி முழுமையாக கிடைக்காமல் அந்த நிதியில் கூட முறைகேடு நடந்துள்ளது. இதுபோல நலவாரியத்தில் பதிவு செய்யாத ஏராளமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிதிப் பற்றாக்குறையைப் போக்க கள்ள நோட்டுகளால் முடியும் - திருநாவுக்கரசர் கருத்து!