ETV Bharat / state

கோயில் வளாக தடுப்புச் சுவர் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு...! - கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த மணல் அரிப்பு தடுப்பு சுவர், இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

samithoppu-there-was-tension-and-excitement-in-the-area
கோயில் வளாக தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பும்.
author img

By

Published : Jan 31, 2020, 11:47 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்கு ரதவீதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அங்கு செல்ல பாதை இல்லாமல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் அதை அகற்றவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த நினைவு மண்டபத்துக்குச் செல்ல வசதியாக தடுப்புச் சுவரை இடித்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதை அமுல்படுத்துவதற்காக நேற்று மாலை அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் பிடிஒ புஷ்பலதா தலைமையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்து, வருவாய் அலுவலர் இப்ராகிம், கிராம நிர்வாக அலுவலர் சிவராகுல் ஆகியோர் தலைமையில் புல்டௌசர் உதவியுடன் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஜனா.யுகேந்த் கூறுகையில், எங்கள் பட்டா இடத்தில் உள்ள தடுப்புச் சுவரை இடிக்கக்கூடாது. இடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறினார்.

கோயில் வளாக தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஆவணம் சரிவர இல்லாததால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆர்டிஒ மயில், தாசில்தார் அப்துல் மன்னா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பால.ஜனாதிபதி, ஜனா.யுகேந்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இடித்ததற்கு முறையான ஆவணங்கள் சரிவர இல்லாததால் எந்த பதிலும் சொல்லாமல் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு அரசு அலுவலர்கள் கலைந்துச் சென்றனர்.

இது குறித்து பாலஜனாதிபதி கூறியதாவது:-

மண் அரிப்பு தடுப்பு சுவர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட இடத்தில் சுமார் 80 அடிநீளத்தில் அலுவலர்கள் அத்துமீறி சட்டவிரோதமாக இடித்து அகற்றினர். இது தொடர்பாக ஆர்டிஒ விசாரித்தபோது, நிலவுடமையாளர்கள் மீது வழக்கு தொடுக்காமல் இந்த பகுதியை இடித்தது தவறு என்றார்.

Intro:சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த மணல் அரிப்பு தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.Body:tn_knk_06_samithoppu_aggressive_disposal_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த மணல் அரிப்பு தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்கு ரதவீதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவு மண்டபத்திற்கு செல்ல பாதை இல்லாமல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றவேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதனையடுத்து குறிப்பிட்ட அந்த நினைவு மண்டபத்திற்கு செல்ல வசதியாக தடுப்பு சுவரை இடித்து கொடுக்க கோர்ட் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அமுல்படுத்துவதற்காக இன்று மாலை அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் பிடிஒ புஷ்பலதா தலைமையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்து, வருவாய்அதிகாரி இப்ராகிம், கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல் ஆகியோர் தலைமையில் புல்டௌசர் உதவியுடன் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த வக்கீல் ஜனா.யுகேந்த் எங்கள் பட்டா இடத்தில் உள்ள தடுப்பு சுவரை இடிக்கக்கூடாது இடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறி இடிப்பதை தடுத்தார். இச்சம்பவத்தால் பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து ஆவணம் சரிவர இல்லாததால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்டிஒ மயில், தாசில்தார் அப்துல் மன்னா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பால.ஜனாதிபதி, ஜனா.யுகேந்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இடித்ததற்கு முறையான ஆவணங்கள் சரிவர இல்லாததால் எந்த பதிலும் சொல்லாமல் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பாலஜனாதிபதி கூறியதாவது:-
மண் அரிப்பு தடுப்பு சுவர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட இடத்தில் சுமார் 80 அடிநீளத்தில் அதிகாரிகள் அத்துமீறி சட்டவிரோதமாக இடித்து அகற்றியுள்ளனர். இதுதொடர்பாக ஆர்டிஒ விசாரித்தபோது நிலவுடமையாளர்கள் மீது வழக்கு தொடுக்காமல் இந்த பகுதியை இடித்தது தவறு. அதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி சென்றதாக கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.