கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே சேனாபள்ளி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ரதீஸ். இவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிற்சாலை சிறுவர்கள் சிலர் வேலை பார்ப்பதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அங்கு வேலை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட சிறுவர்கள் 5 பேரை மீட்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 5 சிறுவர்களும் அரசு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.