கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.
பட்டியலில் மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 525 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 848 பேர், இதர வாக்காளர்கள் 160 பேர்.
மேலும் குமரி மாவட்டத்தில் 864 ஊரக வாக்கு சாவடிகளும், ஆயிரத்து 208 நகர்ப்புற வாக்குச் சாவடிகளும் சேர்த்து மொத்தம் இரண்டாயிரத்து 72 வாக்கு சாவடிகள் உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: