ETV Bharat / state

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் ராகுல் காந்தி

சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி

author img

By

Published : Sep 7, 2022, 3:38 PM IST

கன்னியாகுமரி: 'தேச ஒற்றுமை' என்ற யாத்திரையை காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்க உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் பத்தாம் தேதி வரை நான்கு நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப்பயணத்தின்போது வழியில் மக்களை சந்திக்கவும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் தொடங்குகின்ற இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி, 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள், 3500 கிலோமீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் சென்று நிறைவு செய்கிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் ஒரு கோடி மக்களைச் சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் ராகுல் காந்தி

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்க உள்ள நடைபயணத்தை முன்னிட்டு, இன்று ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கிருந்து அவர் விவேகானந்தர் மண்டபம் சென்று, பின்னர் காந்தி மண்டபத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல் காந்தி கையில் கொடுத்து, நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க:மீம்ஸ் இல்லைனா வாழ்க்கை போரடிக்கும்; திமுக எம்.பி.செந்தில்குமார் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.