கன்னியாகுமரி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா மற்றும் புதிய கல்வி கொள்கையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இன்று (அக்.3) மாலை கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், வேளாண் மசோதாவை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது, நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேஸ்வரன் தாஸ் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மக்கள் விரோத கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க : நள்ளிரவில் போராட்டம், காதலை ஏற்க மறுத்த தோழி; கல்லூரி மாணவன் தற்கொலை!