இது குறித்து, கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அஞ்சல் துறையின் சார்பில் இந்திய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் 'தீன தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு எழுத்து வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டுவருகிறது.
இதில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இந்த வருடத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் துறை தலைவர் ,தென்மண்டலம், மதுரை-625 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் ஜூலை 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வினாடி-வினா போட்டி நடைபெறும். போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கும் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.