கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலகலுங்கடியை சேர்ந்தவர் அம்பி தாஸ் (54). இவர் மும்பையில் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். இந்த வேலையை விட்டுவிட்டு நாகர்கோவில் வந்த அம்பிதாஸ், பின் பெயிண்டராக வேலைப்பார்த்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வீட்டில் இருந்து வந்த அம்பி தாஸுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனால் அம்பி தாஸ், ஸ்டாலின் உருவப்படத்தை தீக்குச்சிகள் மூலம் உருவாக்க தொடங்கினார். ஒரு வார காலமாக சுமார் 2 ஆயிரம் தீக்குச்சிகள் மூலம் ஸ்டாலின் உருவப்படத்தை உருவாகியுள்ளார்.
இதற்காக தீக்குச்சியின் மேல் இருக்கும் மருந்தை அகற்றிவிட்டு அந்த குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து அம்பி தாஸ் கூறுகையில், " கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் வீட்டில் இருந்தேன்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னை மிகவும் ஈர்த்தது. இதனால் அவரை கெளரவிக்கும் விதமாக அவரது உருவப்படத்தை தீக்குச்சியில் உருவாக்கினேன். இந்த படத்தை ஒரு வர காலம் முயற்சி செய்து உருவாக்கினேன். ஸ்டாலின் நாகர்கோவில் வரும் போது அவரை நேரில் சந்தித்து இந்த படத்தை வழங்கவுள்ளேன்" என்றார்.