ETV Bharat / state

கடப்பாரையால் காது குத்தும் வேலை எல்லாம் வேண்டாம் - பொன். ராதாகிருஷ்ணன் - mineral looting

தமிழ்நாடு அரசே சயனைடை மக்களுக்கு கொடுக்கும் பலவீனமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடப்பாரையால் காது குத்தும் வேலை எல்லாம் வேண்டாம் - பொன் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : May 23, 2023, 1:10 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வைத்து பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை வளம். நாட்டின் தென் கோடியான குமரி மாவட்டம், தமிழ் கூரும் நல் உலகில் சொல்லப்பட்டிருக்கும் ஐவகை நிலங்களில் நான்கு வகையான நிலங்களை உள்ளடக்கிய மாவட்டம். பாலை நிலம் மட்டும் இங்கு கிடையாது. அப்படிப்பட்ட அழகான மாவட்டம்.

மாவட்டத்தின் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவது இங்குள்ள ஒவ்வொருவரின் கடமை. மிக அத்தியாவசியமான விஷயத்தைத் தவிர, வேறு எந்த காரணத்துக்காகவும் இயற்கை வளங்களை சீண்டி பார்க்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமாக கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி பகுதியில் ஒரு மலை காணாமல் போய் விட்டது. தோட்டியோடு பகுதியில் மலைகள் உடைக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன. கேரள அரசைப் பாராட்டுகிறேன். கேரள மாநிலத்தில் நிறைய மலைகள், ஆறுகள் உள்ளன. ஆனால், அங்கிருந்து எடுக்க விட மாட்டார்கள். கேரள அரசு மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

கேரளாவில் எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அங்குள்ள மலைகளில் இருந்து கருங்கல் உள்ளிட்ட கனிம வள மூலப் பொருட்களை எடுப்பதில்லை. அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து கனிம வளப் பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு, அரசு மற்றும் அதிகாரிகள் ஆதரவோடு நாள்தோறும் கேரளாவுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடத்தப்படுகின்றன.

பொதுமக்கள் மத்தியில் இது சம்பந்தமான குற்றச்சாட்டுகள் வந்ததைத் தொடர்ந்து, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி - கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடி மையத்திற்குச் சென்று சோதனைச் சாவடியில் உள்ள காவல் துறையினரையும், அதிகாரிகளையும் அமைச்சர் தோரணையில் மிரட்டி டிராமா நடத்தி வருகிறார்.

லாரியை யார் அனுமதித்தது என்றும், எஸ்.பி. என்ன செய்கிறார் எனவும் கேட்கிறார். எஸ்.பி., கலெக்டரை சந்திக்கும்போது எத்தனை முறை நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறீர்கள்? அமைச்சர் சொல்லியும் அதிகாரிகள் கேட்கவில்லை என்றால், இது யார் குற்றம்? அதிகாரிகளை நீங்கள் இடம் மாற்றம் போன்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? படித்தவர்கள் நிறைந்த மாவட்டத்தில் கடப்பாரையால் காது குத்தும் வேலை வேண்டாம். ஏன் ஒரு அமைச்சருக்கு அந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை வைத்து இந்த கடத்தலைத் தடுக்க முடியாதா?

அதை விட்டுவிட்டு இவரே களமிறங்கி நாடகம் நடத்த வேண்டுமா? தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டாஸ்மாக்கில் தமிழ்நாடு அரசே சயனைடு மக்களுக்கு கொடுக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காவல் துறைதான் பொறுப்பு. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் தவறு” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திட்டமிட்ட கொலைகள் அதிகரிப்பு - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.