ETV Bharat / state

உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ் - ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த நபரை காப்பாற்றிய போலீஸ்

கன்னியாகுமரி: ரயிலில் அடிபட்டு கிடந்த நபர், மற்றொரு ரயிலில் சிக்கி அடிபடுவதற்கு முன்பு அவரை தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினர்
தங்களது உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினர்
author img

By

Published : Jan 25, 2020, 8:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு (50). இவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்கொள்வதற்காக ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேஷ்பாபு, சிறப்பு பிரிவு காவலர் பிலிப் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்றார்கள்.

அப்பொழுது அவ்வழியாக அனந்தபுரி விரைவு ரயில் வந்து கொண்டு இருந்தது. சடலத்தின் அருகே ரயில் வரும் பொழுது ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தவர் மீது ரயிலின் முகப்பு வெளிச்சம் பட்டது. அப்போது இறந்த நபரின் உடலில் அசைவுகள் தெரிந்ததை உதவி ஆய்வாளர் கவனித்தார். உடனடியாக அவ்வழியாக வந்த அடுத்த ரயில் அவரை மோதுவதற்க்கு முன்பு ஓடிச் சென்று அடிபட்ட நபரை காப்பாற்றினார்.

ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த நபரை காப்பாற்றிய போலீஸ்

பின்னர் சக காவலர் பிலிப் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் அடிப்பட்ட நபரை தூக்கி ஒரு கிலோ மீட்டம் தூரம் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்று அவசர ஊர்திக்கு கொண்டு சென்றார். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆரல் வாய்மொழி உதவி ஆய்வாளரும் சக காவலரும் அவரை காப்பாறியுள்ளதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதையும் படிங்க:

'வீட்டைக் காணோம்' வடிவேலு பாணியில் கலெக்டரிடம் புகாரளித்த கூலித் தொழிலாளி!

Intro:கன்னியாகுமரி விரைவு ரயிலில் அடிப்பட்டு ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சடத்தை மீட்க சென்ற உதவி ஆய்வாளர். சடத்தின் மிக அருகே மற்றோரு ரயில் வரும் பொழுது ரயில் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இறந்தவர் என கருதப்பட்டவரிடம் அசைவு தெரிந்ததால் துணிச்சலுடன் பாய்ந்து இறந்தவர் என கருதப்பட்டவரை காப்பாற்றினர் உதவி ஆய்வாளர் . பின்னர் சக காவலர் உதவியுடன் ரயில் அடிப்பட்டு துண்டான கால்களையும் பாதிக்கப்பட்டவரையும் தண்டவாளம் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.Body:tn_knk_01_help_subinspector_script_TN10005
கன்னியாகுமரி எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி விரைவு ரயிலில் அடிப்பட்டு ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சடத்தை மீட்க சென்ற உதவி ஆய்வாளர். சடத்தின் மிக அருகே மற்றோரு ரயில் வரும் பொழுது ரயில் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இறந்தவர் என கருதப்பட்டவரிடம் அசைவு தெரிந்ததால் துணிச்சலுடன் பாய்ந்து இறந்தவர் என கருதப்பட்டவரை காப்பாற்றினர் உதவி ஆய்வாளர் . பின்னர் சக காவலர் உதவியுடன் ரயில் அடிப்பட்டு துண்டான கால்களையும் பாதிக்கப்பட்டவரையும் தண்டவாளம் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (50). இவர் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் அடிப்பட்டு தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்கொள்வதற்காக ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேஷ்பாபு மற்றும் சிறப்பு பிரிவு காவலர் பிலிப் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்றார்கள். அப்பொழுது அவ்வழியாக அனந்தபுரி விரைவு ரயில் வந்து கொண்டு இருந்தது. சடத்தின் அருகே ரயில் வரும் பொழுது ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தவர் என கருதப்பட்டவரின் மீது ரயின் முகப்பு வெளிச்சம் பட்டது. இதில் சிறய உடல் அசைவுகள் தெரிந்ததை உதவி ஆய்வாளர் கவனித்தார். உடனடியாக உயிரையும் பொருட்படுத்தால் தண்டவாளத்தின் வழியாக ஓடி சென்று ரயிலில் அடிப்பட்டு தண்டவாளத்தில் கிடந்தவர் மீது அவ்வழியாக வந்த அடுத்த ரயில் மோதுவதற்க்கு முன்பாக பாய்ந்து சென்று காப்பாற்றினார். பின்னர் சக காவலர் பிலிப் உதவியுடன் பொதுமக்களையும் அழைத்து கொண்டு ரயிலில் அடிப்பட்டு கிடந்தவரை சுமந்து கொண்டு இரு கால்களையும் எடுத்து கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டம் தூரம் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்று பின்னர் அவரசர ஊர்தியில் ஏற்றி விட்டு ரயிலில் அடிப்பட்டு இறந்தவர் என கருதப்பட்டவரின் உயிரை மீண்டும் ஒரு ரயிலில் அடிப்பட்டு இறக்காமல் காப்பாற்றினார்.ஆரல் வாய்மொழி உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர் பிலிப் ஆகியோர் உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதாபிமான இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
விஷுவல்- இறந்தவராக கருதப்பட்டவரை காப்பாற்றி கொண்டு வரும் காட்சி. மற்றும் ரயிலில் அடிப்பட்டவரின் புகைப்படம் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் புகைப்படங்கள்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.