ETV Bharat / state

இறந்துபோன காவலரின் குடும்பத்திற்காக நிதி திரட்டிய சக காவலர்கள்! - நிதி திரட்டிய காவலர்கள்

கன்னியாகுமரி : தற்கொலை செய்து கொண்ட காவலர் ஒருவரின் குடும்பத்திற்காக, சக காவலர்கள் ஒன்றிணைந்து ஏழு லட்ச ரூபாய் நிதி திரட்டி வழங்கினர்.

இறந்துபோன காவலருக்காக நிதி திரட்டிய சக காவலர்கள்!

author img

By

Published : Jun 10, 2020, 4:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடை அடுத்த கள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமணி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். இவர் குமரி மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணமணிக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்த அவர், கடந்த ஜனவரி 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பம் வறுமையில் வாடி வந்தது.

இந்நிலையில், கிருஷ்ணமணியுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நண்பர்கள், கிருஷ்ணமணியுடன் ஒன்றாக பயிற்சி பெற்ற காவலர்கள் இணைந்து, அவரது குடும்பத்திற்காக நிதி திரட்டத் தொடங்கினர். சமூக வலைதளம் மூலமாகவும் அவர்கள் நிதி திரட்டினர்.

இதன் மூலம் ஏழு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாய் கிடைத்த நிலையில், இந்தத் தொகையை கிருஷ்ணமணியின் இரண்டு மகள்களின் பெயரில் தலா இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு எல்ஐசி பத்திரமாகவும், மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை பணமாகவும் வழங்க முடிவு செய்தனர்.

இதற்கான நிகழ்வு குமரி மாவட்ட தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இறந்து போன காவலர் கிருஷ்ணமணியின் மனைவி லீனாவிடம், மாவட்ட தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் இந்தத் தொகையை வழங்கினார்.

காவலருடன் ஒன்றாக பயிற்சி பெற்ற நண்பர்கள் அவரது குடும்பத்திற்கு உதவும் விதமாக இவ்வாறு நிதி திரட்டி வழங்கியதை, காவல் துறை உயர் அலுவலர்களும் பொதுமக்களும் பாராட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.