ETV Bharat / state

Amrit Bharat : நாகர்கோவில் ரயில் நிலையம் புனரைமைப்பு பணி... பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தர்!

author img

By

Published : Aug 6, 2023, 4:46 PM IST

நாகர்கோவில், குழித்துறை ஆகிய இரு ரயில் நிலையங்கள் 16 முக்கால் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டம் அடிகல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி: இந்திய நாட்டின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலமாக இந்திய நாட்டின் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்திட திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டு, ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பில், 125 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் சென்னை, கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 நிலையங்கள் கேரளாவில் சொரனூர், தலைசேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் சூலூர் பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 11 கோடியே 38 லட்சம் ரூபாயிலும், குழித்துறை ரயில் நிலையம் 5.35 கோடி ரூபாயிலும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

மேலும், பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் 25 ரயில்வே நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்தை பொறுத்தவரை, ரயில் நிலையத்தில் முன் பகுதி பிரம்மாண்டமான அலங்கார வளைவு, டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் முன்பதிவு மைய கட்டிடங்களில் பயணிகளுக்கு கூடுதல் நவீன வசதிகள், நடைமேடைக்கு பயணிகள் எளிதில் வர நடைபாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் இடம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னக ரயில்வேயில் திருவனந்தபுரம் கோட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், குழித்துறை ரயில் நிலையம் கேரளாவில் ஆலப்புழா, காயங்குளம் சந்திப்பு, வடக்கஞ்சேரி, அங்கமாலி, சாலக்குடி, திருப்புனித்துரா, சங்கனாச்சேரி, மாவலிக்கரை, நெய்யாற்றங்கரை, குருவாயூர், எட்டுமானூர் என 13 ரயில்வே நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் இடம் பெற்றுள்ளன.

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் சச்சீந்திர மோகன் சர்மா மற்றும் அதிகாரிகள் நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகள், ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முன்னதாக கலந்துகொண்ட நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி பேசும் போது, "பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் போக்குவரத்து எளிமைப்படுத்தப்பட்டு, மக்களுக்கு பல்வேறு வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறை பொறுத்தவரையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இரட்டை வழி திட்டம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 62 ரயில் நிலையங்களும், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில்கள் நிலையங்களும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறி வருகிறது" என தெரிவித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசும்போது, "நாடு முழுவதும் 508 ரயில்வே செயல்களை மேம்படுத்தும் பணியினை பிரதமர் துவக்கி வைத்தார். குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தினசரி ரயிலாக மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் கன்னியாகுமரி- நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை, நாகர்கோவில் - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரயில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மீண்டும் கோவை வருகிறது.

எனவே அந்த ரயிலை நாகர்கோவில் திருநெல்வேலி, திருச்சி வழியாக இயக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதேபோல் நாகர்கோவில் கோட்டாறு கூழக்கடை பஜாரின் வடக்கு பகுதியில் ரயில்வேக்கு இடம் உள்ளது. இடதுபுறம் மாநகராட்சி இடமாக உள்ளது. எனவே இந்த ரயில்வே பாதையை தூய்மைப்படுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்கு தமிழக முதலமைச்சர் 135 கோடி ரூபய் ஒதுக்கீடு செய்து, சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.

எனவே கோட்டார் கூழக்கடை முதல் ரயில்வே ஸ்டேஷன் வரையுள்ள இடத்தை தூய்மை படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பேசினார். பின்னர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறும்போது, "கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்னியாகுமரியில் இருந்து புதிய ரயில்கள் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரையிலான சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: போனா வராது பொழுது போனா கிடைக்காது.. ஆடித் தள்ளுபடியில் கொடிகட்டி பறக்கும் தக்காளி விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.