கன்னியாகுமரி அருகே சந்தையடி வாக்குச்சாவடியில் ஹேமலதா என்ற தேர்தல் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. அப்போது கண் தெரியாத மூதாட்டி தன் பேரனுடன் ஓட்டுப்போட வந்தார்.
அப்போது அங்கிருந்த தலைமை அலுவலர் ஹேமலதா மூதாட்டிக்கு தான் ஓட்டு போட உதவி செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். பப்பம்மை தாமரை சின்னத்திற்கு வாக்கு போட சொன்னதாகவும், ஆனால் தலைமை அலுவலர் கண் தெரியாதவர் என்று நம்பிக்கையின் பேரில் கை சின்னத்தில் ஒட்டு போட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
மூதாட்டிக்கு கொஞ்சம் கண் தெரியும் என்பதால் மூதாட்டி உடனே நான் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கச் சொன்னேன், ஆனால் நீங்கள் கை சின்னத்துக்கு வாக்களித்து உள்ளீர்கள் என கூறியுள்ளார் .
இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்தக் கோரியும் 200க்கு மேற்பட்ட பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் அங்கு கூடி வாக்கு இயந்திரத்தை அங்கிருந்து கொண்டு செல்ல விடாமல் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அலுவலர் மீது நடவடிக்கை கோரியும் மறு தேர்தல் நடத்தக் கோரியும் மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்து விட்டு சென்றன.
பின்னர் வாக்குச்சாவடி இயந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்போடு கோணம் அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் கொண்டு செல்லப்பட்டது.