ETV Bharat / state

நியாயவிலை கடையினை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - நியாயவிலை கடை

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே நியாயவிலை கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் கடை மூடியே கிடப்பதால் பொதுமக்கள் நியாயவிலை கடையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

people-besieged-ration-shop
people-besieged-ration-shop
author img

By

Published : Jan 31, 2021, 8:26 AM IST

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் நியாவிலை கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் சுமார் 1,300 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நியாய விலைக்கடை ஊழியர் பல்வேறு காரணங்களை காட்டி, பல நாட்களாக கடையை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.29) கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பொது மக்களிடம் நாளை (ஜன.30) அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற்று செல்லலாம் என கடை ஊழியர் கூறியுள்ளார் . அதனை நம்பி நேற்று காலை முதலே கடைக்கு வந்த பொது மக்கள் கடை பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மதியம் வரை கடை திறக்கப்படவில்லை.

இது குறித்து அலுவவர்களிடம் கேட்ட போது சரியாக பதில் கூறப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாவிலை கடையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாதம் இறுதியிலும் கடை திறக்கப்படாதால் இந்த மாதத்திற்கான பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், எனவே உடனடியாக நியாயவிலை கடையினை திறந்து பொருட்கள் தரும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 4 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வளர்ப்பு பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.