கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாநில தகவல் ஆணையத்திற்கு அளித்த புகார்களின் மீதான விசாரணை நவ.20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், 75 மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் விசாரணை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த அவர், “மாநில தகவல் ஆணையத்திற்கு வர பெற்றுள்ள புகார்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த புகார்கள் அதிகமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரப்பட்டுள்ள புகார் மீது வரும் ஐந்து நாள்களுக்குள் பதில் அளிக்காவிடில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
2018 ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையத்திற்கு 19 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்ற நிலையில், அவற்றில் 17 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டன. மீதம் உள்ள இரண்டாயிரம் மனுக்களுக்கு இரு மாதங்களில் தீர்வு ஏற்படுத்தப்படும். தகவல் ஆணையத்திற்கு என தனிக் கட்டடம் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது”. என்று தெரிவித்தார்.