ETV Bharat / state

குமரியில் விடிய விடிய கனமழை! தென்னை மரம் விழுந்து ஒருவர் படுகாயம்!

கன்னியாகுமரி: விடிய விடிய பெய்த கனமழையால் அழகியபாண்டிபுரம் அருகே வீட்டின் மேற்கூரை மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனயைில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

HEAVY RAIN
author img

By

Published : Jun 12, 2019, 12:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், அழகியபாண்டிபுரம் அருகே பேயோடு கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் (65) என்பவர் வீட்டின் மேல் அதிகாலையில் தென்னை மரம் முறிந்து விழுந்தது.

இதில் துாங்கிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரின் காலில் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தேசமடைந்தன. தகவல் கொடுத்தும் சேதமடைந்த வீட்டை இதுவரை அரசு அலுவலர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழையால் வீடுகள் தேசம்

TN_KNK_01_12_HEVIRAIN_MANPADUKAYAM_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையில் அழகியபாண்டிபுரம் அருகே பேயோடு கிராமத்தில் தென்னை மரம் வீட்டில் முறிந்து விழுந்தது. வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர் படுகாயம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வந்த நிலையில் அழகிய பாண்டிபுரம் அருகே பேயோடு கிராமத்தை சேர்ந்த மோசஸ் (65) என்பவர் வீட்டின் மேல் இன்று அதிகாலை தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இந்த வீட்டின் உரிமையாளர் கால் மறிவு ஏற்ப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. தகவல் கொடுத்தும் சேதமடைந்த வீட்டை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும்பார்க்க வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.